dinamalar telegram
Advertisement

170 கி.மீ வேகத்தில் காரில் பறந்த மத்திய அமைச்சர்

டெல்லி மும்பை நகரங்களை இணைக்கும் எக்ஸ்ப்ரஸ்வே என்கிற அதிவேக சாலை ரெடியாகி வருகிறது. வேலைகள் நடப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார். அமைச்சர் சென்ற கியா கார்னிவல் காரின் ஸ்பீடாமீட்டர் ஒரு கட்டத்தில் 170 கிலோ மீட்டர் வேகத்தை காட்டியது. சட்டப்படி உச்ச வேகம் 120 கி.மீ. இந்த சாலை ஒரு லட்சம் கோடி ரூபாயில் தயார் ஆகிறது. 12 லேன்கள் இருக்கும். தூரம் 1,359 கி.மீ. இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிக நீளமான எக்ஸ்ப்ரஸ்வே இதுதான் என்கிறார் நிதின். மனிதர்களோ விலங்குகளோ சாலைக்குள் நுழையாமல் தடுக்க இரு புறமும் 6 அடி உயர சுவர் கட்டப்படும். அடுத்த ஆண்டு வேலை முடிந்து 2023 ஜனவரியில் திறக்கப்படும்.. இப்போது மும்பை டெல்லி பயண நேரம் 25 மணி. இந்த சாலை ரெடியானதும் 12 மணி நேரத்தில் போய் விடலாம். டோல் கட்டணமாக மாதம் 1000 கோடி கிடைக்கும் என்றார் அமைச்சர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (6)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)
அப்புசாமி
அப்புசாமி - . 20-செப்-2021 10:31 IST

இவுரு பறக்கும் போது ரோடுல ஈ, காக்கில்லாம பாத்துப்பாய்ங்க. அடிபடாம போயிடுவாரு. அகில உலகத்திலிருந்து ஆத்மநிர்பரா கீழே தகர டப்பா கார்களை தயாரிச்சு வித்துக்கிட்டிருக்காங்க. ஆயிரக்கணக்கில் கார்கள் பறக்கும்போது உரசினாலே அப்பளமாயிரும்

Reply
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 20-செப்-2021 05:04 IST

சட்டம் சமமென்றால் இந்நேரம் இவர் கைது செய்யப்பட்டு இருப்பார். ஆனால், என்ன இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர், நடிகைகள் மின்னல் வேகத்தில் கார் ஓட்டினாலும் சட்டம் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைதான் பார்க்கிறது.

Reply
Hari
Hari - , . 20-செப்-2021 10:38 IST
Report Abuse

Mani sir athu 170km speed pora testing track. Newsa nalla fulla padi...

Rate this:
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 20-செப்-2021 04:42 IST

எவன் சொன்னது சட்டம் அனைவருக்கும் சமம் என்று?

Reply
Hari
Hari - , . 20-செப்-2021 14:35 IST
Report Abuse

Mani subjecta marupadiyum nalla padi...

Rate this:
jay
jay - toronto,கனடா . 20-செப்-2021 00:27 IST

எப்ப பாத்தாலும் குறை கண்டுபிடிப்பதே உங்களுடையது வேலையா போச்சு

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement