dinamalar telegram
Advertisement

விவாதங்களில் பங்கேற்க இடம் இல்லை

லோக்சபா, ராஜ்யசபாவுக்காக 'சன்சத் டிவி' என்ற பெயரில் சேனல் இயங்கி வருகிறது. இந்த டிவியின் விவாதங்களில் தங்கள் கட்சி சார்பாக யார் கலந்து கொள்வர் என்பதை கட்சி தலைமை சபாநாயகருக்கு தெரிவிக்கும். தி.மு.க., சார்பாக திருச்சி சிவாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு பெயர் இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சிவா நீண்ட காலமாக எம்.பி.,யாக இருப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் சுமுகமான உறவு வைத்திருப்பவர். இதன் காரணமாகதான் தி.மு.க., இவரை தேர்வு செய்துள்ளது. அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை விவாதங்களில் பங்கேற்பார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement