dinamalar telegram
Advertisement

கூடலூரில் T 23 புலி உயிருடன் சிக்கியது!

நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் 4 பேரை கொன்ற T 23 புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர். புலியை பிடிக்க, கடந்த 21 நாட்களாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். பிடிப்பதற்கு ஏற்ற சூழல் அமையவில்லை. நேற்று இரவு, தெப்பக்காடு - மசினகுடி சாலையில் நடந்து சென்ற புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஆனால், மயக்க நிலையிலேயே புலி வனத்திற்குள் தப்பி சென்றது. இன்று, கூட்டுப்பாறை பகுதியில் சுற்றித்திரிந்த புலிக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தினர். இந்த முறை ஆபரேஷன் சக்சஸ் ஆனது. புதருக்குள் மயக்கத்தில் இருந்த புலி பிடித்து, கூண்டில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Vittalanand
Vittalanand - . 15-அக்-2021 19:31 IST

T23 தானா அதைத்தான் ரகசியமாக சுட்டு புதைத்து விட்டார்களே

Reply
Vittalanand
Vittalanand - . 15-அக்-2021 19:03 IST

தமிழ் நாட்டில் 2 கூடலூர் (கம்பம்) மற்றும் ஊட்டி உண்டு. அது போல 2 திருப்பத்தூர் மற்றும் திருப்ப டூர் உண்டு.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement