dinamalar telegram
Advertisement

ராணுவத்தை பவர்ஃபுல் ஆக்குவதே இலக்கு!

இந்திய ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில், 41ஆயுத தொழிற்சாலைகள் 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டன. இவற்றை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்தும் தேவை இருந்தும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை. தற்போது அதில் முக்கிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார். ராணுவத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை அதிகம் தயாரிக்கும் நாடாக முன்னேற்ற, ஒற்றை சாளர அமைப்பு பின்பற்றப்படுகிறது தெரிவித்தார். சுயசார்பு இந்தியா கொள்கையின் கீழ், ராணுவத்தை உலகின் மிகப்பெரிய சக்தியாக மாற்றுவதே நாட்டின் குறிக்கோள் என்றும் மோடி பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ravi chandran
ravi chandran - . 16-அக்-2021 07:00 IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 1000/- ஆக்குவது, மல ஜலம் கழிக்க ஜிஎஸ்டி, காஸ் சிலிண்டர் விலை 2000/- ஆக்குவது. மக்களுக்கு பசிக்காமல் இருக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் திட்டம். டேய் ஆடுங்கடா.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement