dinamalar telegram
Advertisement

போலீசாரை தாக்கியபோது என்கவுண்டர்

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவன் துரைமுருகன் வயது 39. ரவுடி. இவன் மீது 7 கொலை வழக்கு உட்பட 35க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக துரைமுருகனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜா பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தபோது துரைமுருகனும் அவன் கூட்டாளிகளும் போலீசாரை அரிவாளால் வெட்டினான். இதில் எஸ்ஐ ராஜா பிரபு மற்றும் போலீஸ்காரர் டேவிட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட போலீசார் துரைமுருகன் தரப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தான். கூட்டாளிகள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Kannan
Kannan - , . 15-அக்-2021 21:57 IST

Valara vittu suduvathai vida valaramal thadukkum sattam erunthaal pala vuyirkalai kakkalam.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement