dinamalar telegram
Advertisement

தலைமைக் கழக செயலாளராக நியமனம்

சென்னையில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது. வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 106 ஓட்டுக்களில் 104 ஓட்டுகள் துரை வையாபுரிக்கு ஆதரவாக கிடைத்தது. இதையடுத்து கட்சியின் தலைமைக்கழக செயலாளராக துரை நியமிக்கப்பட்டார். இது வாரிசு அரசியல் இல்லை; பொதுவாழ்வுக்கு தேவையான அத்தனை குணாதிசயங்களும் துரைக்கு உள்ளது என வைகோ கூறினார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, தொண்டர்கள் விருப்பபடியே தலைமை கழக செயலாளர் பொறுப்பு துரைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். மரணம் வரை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் எனவும் வைகோ கூறினார். #MDMK #Vaiko #DuraiVaiyapuri #PoliticalMoves
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
அப்புசாமி
அப்புசாமி - . 21-அக்-2021 09:56 IST

ம.தி.மு.க வுக்கு இன்னும் கொஞ்சம் சொத்து, துட்டு இருக்குது. அதை கட்டிக் காக்கத்தான் மகனுக்கு பதவி. தனக்குப் பிறகு மகனை களமிறக்கி, ஒரு எம்.எல்.ஏ ஆக்கி அழகுபார்க்கத்தான் இந்த ஏற்பாடெல்லாம்.

Reply
ravi chandran
ravi chandran - . 21-அக்-2021 05:31 IST

மானம் மரியாதை சூடு சொன்னதை எங்கு கிடைத்தாலும் வைகோவிற்கு தெரியப்படுத்தவும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement