dinamalar telegram
Advertisement

ஸ்ரீரங்கம் யானைகளின் ஆனந்த குளியல்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டாள் மற்றும் லட்சுமி என்ற இரு யானைகள் இறைபணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கோவில் யானைகளின் மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியுடன் இறை பணியாற்றும் வகையில் ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான தோப்பில் பெரிய குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. 56 அடி நீளம், 56 அடி அகலம், 6.5 அடி ஆழத்தில் குளம்போல 8 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த நிலையில் குளியல் தொட்டிக்கும் யானைகளுக்கும் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். அதைத் தொடர்ந்து, கோவில் உதவி ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி முதல்முறையாக தொட்டியில் இறங்கி குளித்தன. யானைகள் இரண்டும் ஆனந்தமாக நீரில் விளையாடின.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement