dinamalar telegram
Advertisement

ராஜினாமா வாபஸ் சித்து முடிவின் பின்னணி என்ன?

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைக்கு கடிதம் அனுப்பிய நவ்ஜோத் சிங் சித்து, மீண்டும் அப்பதவியில் தொடர உள்ளதாக அறிவித்துள்ளார். சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பதவி விலகினார். சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித் சிங், முதல்வர் ஆனார். போலீஸ் டிஜிபி இக்பால், அட்வகேட் ஜெனரல் தியோல் ஆகியோர் நியமனத்தில் அதிருப்தி அடைந்த சித்து அவர்களை நீக்க வலியுறுத்தினார். 2015ல் சீக்கியர்களின் புனித நூல் சேதப்படுத்தப்பட்டது மற்றும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் இவர்கள் இருவருக்கும் தொடர்புள்ளதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். அவர்களை நீக்காததால், ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியிருந்தார் சித்து. காங்கிரஸ் மேலிடம் அதை ஏற்கவில்லை. சித்துவை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. அட்வகேட் ஜெனரல் தியோல் ராஜினாமா செய்ததால், மாநில காங்கிரஸ் தலைவராக மீண்டும் தொடர இருப்பதாக சித்து கூறியுள்ளார். புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படும்போது, தாமும் பொறுப்பேற்க உள்ளதாக சித்து தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்தது தனிப்பட்ட காரணத்திற்காக அல்ல; ஒவ்வொரு பஞ்சாப் மக்களின் நலனுக்கானது என்று கூறினார். ----
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement