dinamalar telegram
Advertisement

மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு | Stalin Visit Flood | Rain water | Heavy Rain

சென்னையில் 2 நாட்களாக பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள், தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். புளியந்தோப்பு பகுதியில் ஜேசிபி மூலம் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஓட்டேரி பகுதியிலும், தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலும் மழை நீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார். பெரவள்ளூர் காவல்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், அசோக் அவன்யூ, ஜிகேஎம் காலணி பகுதிகளுக்கும் சென்ற முதல்வர் ஸ்டாலின், நீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement