dinamalar telegram
Advertisement

மரங்கள் வெட்ட அனுமதிக்காத கேரளா சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு!

முல்லை பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக, 15 மரங்களை வெட்ட கேரள அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டது. கேரளா வனத்துறை அனுமதி வழங்கியதால், கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், வனத்துறையினர் தங்களை கேட்காமல் தமிழகத்திற்கு மரங்கள் வெட்ட அனுமதி அளித்து விட்டனர் எனக்கூறி, அந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. பேபி அணையை வலுப்படுத்தும் பணி மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, மரங்களை வெட்ட அனுமதி வழங்க, கேரள அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement