dinamalar telegram
Advertisement

பஸ்சை மறித்து டிரைவரை தாக்கி பணப்பை பறிப்பு அதிர்ச்சி வீடியோ | Viral Video | Rowdies Attack bus

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு நேற்று பகல் 12 மணியளவில் தனியார் பஸ் புறப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தில் பஸ் சென்றபோது பிரித்தி, சீனுவாசன், மருது என்ற 3 வாலிபர்கள் டூவீலரில் வந்து பஸ்சை வழிமறித்தனர். டிரைவர் தேசிங்கை அரிவாளால் தாக்கினர். பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். தடுக்க வந்த கண்டக்டர் நவீன்குமார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணப்பை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். வாலிபர்களின் அட்டகாசத்தைக் கண்ட பயணிகள் ஓடிப்போய், மூவரையும் பிடித்து ரெட்டிச்சாவடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடக்கிறது. #ViralVideo #RowdiesAttackbus
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Ram Mayilai
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா . 01-டிச-2021 20:02 IST

இந்த கொள்ளையர்களை பிடித்து கை அல்லது கால்களை முடமாக்கி சாலை ஓரமாக வீசிவிட்டு சென்று இருக்கலாம்.

Reply
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 01-டிச-2021 19:06 IST

எல்லாம் விடியல் ஆட்சியின் மகிமை. விடியல் ஆட்சி ரவுடிகளுக்கு பொற்காலம் திருடர்களுக்கு, முக்கியமாக அரசு துறைகளில் உள்ள லஞ்ச பேய்கள் அதிக சக்தி பெற்று விளங்கும் சிறந்த காலம்.

Reply
Aladi Suga
Aladi Suga - Tirunelveli,இந்தியா . 01-டிச-2021 18:59 IST

தி.மு.க. ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement