Load Image
dinamalar telegram
Advertisement

டோல்பிளாசாக்களில் நடந்த முறைகேடு அம்பலம்

டோல்கேட்களில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 47 டோல் பிளாசாக்களிலும் கட்டண வசூல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் 3875 கோடி ரூபாய் சுங்கக்கட்டணம் வசூலானது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 3421 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கிறது. எஞ்சிய 5 மாதங்களில் இன்னும் 2000 கோடி ரூபாய்க்கு அதிகமாக டோல் கட்டணம் வசூல் ஆகலாம்; மொத்த வசூல் 5,500 கோடியை தாண்டக்கூடும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எதிர்பார்க்கிறது. டோல் கட்டணம் பணமாக வசூலிக்கப்பட்டபோது, சட்டவிரோதமான முறையில் சில தரப்பு வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக இயங்கும் மணல் குவாரி லாரிகள். அது மட்டுமல்லாமல் வசூல் கணக்கை முறையாக காட்டாமலும் மோசடி செய்யப்பட்டிருக்கிறது; அந்த முறைகேடுகளை ஃபாஸ்ட் டேக் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக டோல் பிளாசாக்களில் 2018 ல் 3262 கோடி ரூபாயும் 2019ல் 3392 கோடி ரூபாயும் 2020ல் 3875 கோடி ரூபாயும் வசூலானது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement