Load Image
dinamalar telegram
Advertisement

எல்லாம் அவன் செயல்! | Youtuber Maridhas Arrest | DMK Master Plan | Dinamalar Exclusive

பின்னணியில் திமுக கொடி மாரிதாஸ் மீது திமுக போட்ட வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது பற்றி சில விமர்சனங்கள் வருகின்றன. இந்த வழக்கில் பலருக்கு தெரியாத ஓர் உண்மை அந்த தீர்ப்பில் இருப்பது பற்றி பெரிதாக பேச்சு எழவில்லை. யூட்யூபர் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தவர் திமுகவின் ஐடி பிரிவு நிர்வாகி பாலகிருஷ்ணன். மனுவில் அவர் சொல்லி இருக்கும் காரணங்களில் ஒன்று ஐகோர்ட் நீதிபதிக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது. “மாரிதாஸ் போட்ட ட்விட்டர் பதிவின் விளைவாக திமுக-வினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே வெறுப்பும் விரோதமும் ஏற்படும்” என்பது மனுதாரரின் கணிப்பு. நீதிபதியே இதை தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருக்கிறார். மனுதாரர் அவசரத்தில் தயார் செய்த மனு போல என்று கூறி முடித்து கொண்டார் அவர். ஆனால் மாரிதாஸ் சும்மா இருப்பாரா? திமுகவின் முகமூடியை திமுக ஐடி விங் நிர்வாகி பாலகிருஷ்னனே கிழித்து விட்டார் என நண்பர்களிடம் சொல்லி மகிழ்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement