Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 16-12-2021 | Cinema News Roundup | Dinamalar Video

அஷ்வின்ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா, நெப்போலியன் நடித்துள்ள படம் 'அன்பறிவு'. கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ஆதி நடித்து வெளிவந்த 'சிவகுமாரின் சபதம்' படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கலாம். தமிழில் இந்தவார வெளியீட்டில் தமிழ் படங்களை விட வேற்று மொழி படங்களுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. ஹாலிவுட் படமான 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படம் இன்று 300 தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்திற்கு நல்ல புக்கிங் உள்ளது. அடுத்து, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா' தமிழில் டப் ஆகி நாளை வெளியாகிறது. 350 தியேட்டர்களில் வெளியாகும் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement