Load Image
dinamalar telegram
Advertisement

மிளகாய் பொடி தூவி 25 பவுன் திருடிய ஆசாமிகளுக்கு வலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவர் கிராமத்துக்கு வெளியில், வயலின் நடுவில் தனி வீடு கட்டி வசித்து வந்தார். தாய் சுதா, பெரியம்மா லதா , பாட்டி ரஞ்சிதம்மாள் அவருடன் தங்கி இருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்த போது 3 ஆசாமிகள் நுழைந்தனர். துப்பாக்கியால் சுட்ட போது வீட்டில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். பெண்கள் அணிந்து இருந்த மற்றும் வீட்டில் இருந்த 25 புவுன் நகை , ரூ 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து மிளகாய் பொடி தூவி தப்பினர். நால்வரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர் .முதலுதவி கொடுத்தப்பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் . கொள்ளையர்கள் தமிழ் , ஆங்கிலம் , இந்தியில் பேசியதாக கூறுகின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement