Load Image
dinamalar telegram
Advertisement

டெல்டாவை விட ஒமிக்ரான் 3 மடங்கு வேகம்! | Omicron 3 times faster than Delta! | Covid 19 | Dinamalar News

ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வகையை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதிகளவில் கூடும் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட அளவில் தொற்று பரவல் பற்றி புள்ளி விபரங்களை சேகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் இரவ நேர ஊரடங்கை அமல்படுத்தலாம். தொற்று அதிகரித்தால், சிகிச்சை அளிக்க ஏதுவாக, அனைத்து வசதிகளுடன் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொற்று உள்ள இடங்களில் வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு இருப்பதையும், கோவிட் விதிமுறைகளை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement