Load Image
dinamalar telegram
Advertisement

டிஜிட்டல் மயமாகிறது மின் வாரியம்! | Smart Electric Board | India | Dinamalar

நாடு முழுவதும் தடையில்லா மின் வினியோகம் செய்யவும் , மின் இழப்பை குறைக்கவும் , புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநில மின் வாரியங்களுக்கு கடனாக வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் திட்ட பணிகளை முடித்து விட்டால், கடனில் 60 % மானியம் ஆகி விடும். அந்த பணத்தை திருப்பி தர வேண்டியது இல்லை. இந்த திட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம், அனைத்து துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் வழித்தடங்களில் மீட்டர் பொருத்த உள்ளது. டிரான்ஸ்பாமர்களிலும் பொருத்தப்படும். மின் துண்டிப்பு , மின்னழுத்த பிரச்னைகள் உள்ள இடங்களில் கூடுதல் டிரான்ஸ்பாமர்கள், மின் வினியோக பெட்டிகள் நிறுவப்படும் . வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் வைக்கப்படும். மின் பயன்பாட்டை கணக்கு எடுக்க , ஊழியர்கள் நேரில் செல்ல வேண்டியது இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement