Load Image
dinamalar telegram
Advertisement

இந்தியாவில் ஊடுருவ முயன்ற பாக் ராணுவ வீரர் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா kupwara மாவட்டம் கெரான் செக்டாரில் Keran sector எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றார். இந்திய ராணுவ வீரர்கள் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். உடலையும், ஏகே 47 துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். இறந்த நபர் பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்திருந்தார். அந்நாட்டு எல்லை பாதுகாப்புப் படை வீரராக இருக்கலாம் என இந்திய அதிகாரிகள் கூறினர். அதனால் அவரது உடலை எடுத்து செல்லும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement