Load Image
dinamalar telegram
Advertisement

ஆள் மாறாட்டத்தில் இது ரொம்ப புதுசு

சார் - பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச வசூலுக்காக, மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் குறித்த புகார்களை பெற, வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பிக்க, பதிவுத்துறை அலுவலர்கள் புது வழி கண்டுபிடித்துள்ளனர். சேலம் மண்டலத்தில் ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் குவிந்தது. உதவியாளர் நிலையில் உள்ள ராஜ்குமார் என்பவர் தான் வசூல் பணிகளை முடித்து கொடுப்பதாக கூறப்பட்டது . அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை செக் செய்த போது , அப்படி ஒருவர் வேலையிலே இல்லை என்பது உறுதியானது. சம்பந்தப்பட்ட புகார்தாரரை அடையாளம் காட்ட சொன்னபோது, அவர் ராஜ்குமார் என்று குறிப்பிட்ட நபரின் உண்மையான பெயர் பாலமுரளி என்பது தெரிய வந்தது. லஞ்ச வேட்டையில் பாதிக்கப்படும் நபர்கள், தங்களுக்கு அறிமுகமான போலி பெயரில் தான் புகார் அளிப்பர். விசாரித்தால், அந்த பெயரில் யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி பல அலுவலர்கள் எஸ்கேப் ஆகி வருகின்றனர். பதிவுத்துறையும், லஞ்ச ஒழிப்பு துறையும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement