Load Image
dinamalar telegram
Advertisement

கார்களுக்கு 17 முதல் 109 வரை கட்டணம்

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டது. 2,156 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த வெளிவட்டச்சாலையை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பயன்பாட்டுக்கு வந்த 10 மாதங்களுக்கு பிறகு இந்தச் சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே வரதராஜபுரம், பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரி, நெமிலிச்சேரி அருகே பாலவேடு, மீஞ்சூர் அருகே சின்னமுல்லைவாயல் என 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10ம்தேதி முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும்; பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. நான்கு டோல்பிளாசாக்களில் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் ஒரே வங்கிக் கணக்கில் சேரும்விதமாக உருவாக்கப்பட்டுள்ள சர்வர் செயல்பாட்டுக்குவராத காரணத்தால் திட்டமிட்டபடி திங்களன்று டோல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் டோல் கட்டண வசூல் தொடங்கிவிடும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்களின் வகை மற்றும் சாலையை பயன்படுத்தும் தூரத்தை பொறுத்து குறைந்தபட்சமாக 17 ரூபாய் முதல் அதிகபட்சமாக 702 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி, இந்தச் சாலையை காரில் கடந்து செல்லும் பொதுமக்கள் 17 ரூபாய் முதல் 109 ரூபாய் வரை செலுத்தியாக வேண்டும்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement