dinamalar telegram
Advertisement

எம்ஜிஆர் பிறந்த நாள் அதிமுக சபதம் !

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு நாளை பிறந்த நாள் . இந்த நிலையில் அதிமுக தரப்பு அவரை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டவை : தமிழ் இன எழுச்சியில் அக்கறை கொண்டோர் உருவாக்கிய இயக்கத்தை அழிக்க அராஜகம் செய்த, ஊழலும், சுயநலமும் கொண்ட தீய சக்திகளை எதிர்த்து துணிச்சலாக போராடியவர் எம்ஜிஆர். தமிழகத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றியவர். அவரது வழியில் அவரையே தன் மாதா, பிதா, குரு, தெய்வமாக ஏற்று வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில், வீரம், விவேகத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, 'கார்ப்பரேட்' தேர்தல் பிரசாரம் செய்து, வெற்றி பெற்று வந்துள்ள, திமுகவின் குடும்ப ஆட்சியை வேரறுக்க வேண்டிய நேரம் இது. கோட்டையில் நம் கொடி பறந்திடச் செய்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement