dinamalar telegram
Advertisement

நீர்நிலை இடங்களை பதிய கூடாது ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளன. அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட்டு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். அறிவிப்பு இல்லாமல் மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது. அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement