Load Image
Advertisement

சென்னை மாநகராட்சி இளம் வயது பெண் மேயர் பதவியேற்பு | DMK's R Priya to be first Dalit Mayor of Chennai

28-year-old R Priya takes oath as Chennai's youngest Mayor நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை திமுக மேயர் வேட்பாளராக 74வது வார்டு கவுன்சிலர் பிரியா ராஜன் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் சென்னை மாநகர கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக தேர்வானார். இதையடுத்து ககன்தீப் சிங் பேடி, சென்னை மேயராக பிரியாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார். அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மிகவும் இளம்வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரியா ராஜன், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement