Load Image
Advertisement

தலைநகரில் ரவுடிகள் அட்டகாசம் களமிறங்கும் போலீசார்

சென்னையில், சமீபகாலமாக, அடையாளம் தெரியாத ரவுடி கும்பல் மற்றும் கூலிப்படைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடிக்கடி நடக்கும் குற்றசம்பவங்கள் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள் எல்லை வகுத்து, கொலை, ஆள்கடத்தல், மாமூல் வசூலிப்பு செயல்களில் ரவுடிகள் ஈடுபடுவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கூலிப்படைக்கு தலைவனாகவும், பெரிய ரவுடியாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக இளம் வயதினர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக, சிறப்பு நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போலீசாரும், பழைய குற்றவாளிகளின் பட்டியலை தயாரித்து, அவர்களின் முழு விபரங்களையும் சேகரித்துள்ளனர். ரவுடிகளுக்கு இடையே உள்ள தொடர்பு சங்கிலியை அறுப்பதன் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும். இதற்காக ரவுடிகள், தாதாக்கள், கூலிப்படையினரின் முழு விபரங்களும், டிஜிட்டல் வடிவில் போலீசார் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கூலிப்படை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோரை முன்கூட்டியே கண்டறிந்து, குற்றங்களை தடுக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement