Load Image
dinamalar telegram
Advertisement

சென்னையில் இருந்து ஹஜ் விமானம் இயக்கவேண்டும்

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். சென்னையிலிருந்து ஜெட்டாவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. கோவிட் பரவல் காரணமாக ஹஜ் விமானங்கள் புறப்படும் நகரங்களின் எண்ணிக்கையை 21ல் இருந்து 10 ஆக இந்திய ஹஜ் கமிட்டி குறைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகள் கொச்சியிலிருந்து பயணம் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் உள்ள கொச்சிக்கு சென்று, அங்கிருந்து ஹஜ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் செலவு உட்பட பல சிரமங்களை புனித பயணிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தமிழக ஹஜ் பயணிகளின் நலன் கருதி, சென்னையை புறப்படும் இடமாக அறிவிக்க வேண்டும் என கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement