Load Image
dinamalar telegram
Advertisement

சென்னையில் முகமூடி ஆசாமி வெறிச்செயல்

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கவியரசன். திமுக பிரமுகர். இவரது மகன் பார்த்திபன் வயது 17 மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். காற்றுக்காக வீட்டு வாசலில் படுத்து தூங்கிய போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், பார்த்திபனை பட்டாக்கத்தியால் தலையில் நான்கு இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடினான். முகம் முழுவதும் வெட்டுப்பட்ட நிலையில் பார்த்திபனை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர் முகத்தை மூடிய மர்ம ஆசாமி பட்டாக்கத்தியுடன் நடந்து வருவதும், மாணவனை வெட்டிய பிறகு ஓடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வேறு யாரையோ வெட்ட வந்து விட்டு ஆள் மாற்றி மாணவனை ஆசாமி வெட்டினானா? அல்லது அரசியல் பகை காரணமாக வெட்டினானா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement