Load Image
dinamalar telegram
Advertisement

சென்னை வந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் சென்னை வந்தார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் நாகராஜன், ஹெச் ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏர்போர்ட்டில் வரவேற்றனர். பாஜ தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் உள்ள மாளிகைக்கு சென்ற அமித்ஷாவுக்கு, அங்கும் பாஜகவினர் பேனர்களை ஏந்தி வரவேற்பு அளித்தனர். இன்று காலை 8.40க்கு ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்படும் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார். புதுவை பல்கலைக்கழகத்தில் 3 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரவிந்தர் ஆசிரமம், பாரதியார் நினைவு இல்லத்திற்கு செல்கிறார். பிற்பகலில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். பின்னர் சென்னை வழியாக டெல்லிக்கு புறப்படுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement