Load Image
dinamalar telegram
Advertisement

கோவில்பட்டியில் பரபரப்பு | பஸ் ஸ்டாண்டில் மாணவருக்கு அரிவாள் வெட்டு அதிர்ச்சி சிசிடிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் நின்றிருந்தனர். அப்போது, கார்த்திக் வயது 19 என்ற ஆசாமி மது போதையில் மாணவர்கள் மீது இடித்தார். இரு தரப்புக்கும் சண்டை மூண்டது. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கார்த்திக்கை தாக்கினர். அங்கிருந்து ஓடிய கார்த்திக், சிறிது நேரத்தில் நண்பர்களுடன் பஸ் நிலையத்துக்கு வந்தார். அடித்த மாணவர்களை தேடினார். கிடைக்கவில்லை. அதே கல்லூரியில் படிக்கும் வைரமுத்து (19) அங்கு நின்றிருந்தார். அவரை அரிவாளால் கார்த்திக் வெட்டினார். வைரமுத்துவுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. கோவில்பட்டி போலீசார் சிசிடிவி வீடியோவை ஆராய்ந்தனர். கார்த்திக், கார்த்தி என்ற அட்டு கார்த்தி (19) சின்னமணி (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement