Load Image
dinamalar telegram
Advertisement

ரயில்வே ஸ்டேஷனில் கர்ப்பிணி பலாத்காரம் 3 கொடூரர்கள் கைது

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி, கட்டட வேலைக்காக 3 குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டத்துக்கு ரயிலில் புறப்பட்டனர். மனைவி கர்ப்பமாக இருந்தார். பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபள்ளே ரயில் நிலையத்தில் இறங்கினர். அங்கிருந்து இன்னொரு ரயிலில் கிருஷ்ணாவுக்கு செல்ல வேண்டும். நள்ளிரவு ஆகிவிட்டதால், குழந்தைகளுடன் தம்பதியர் பிளாட்பார்மில் தூங்கினர்.  போதையில் வந்த சிலர்  கணவனை அடித்து துரத்தி விட்டு பெண்ணை பலாத்காரம் செய்தனர். கணவர் ரயில்வே போலீசிடம் ஓடினார். அவர்கள் நிலைய அறையை மூடிவிட்டு தூங்கிவிட்டனர். கதவை தட்டியும் திறக்கவில்லை. பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கணவர் சென்று, போலீசாரை கூட்டி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இதுபற்றி விளக்கமளிக்க ரயில்வே நிர்வாகத்துக்கு ஆந்திர மகளிர் ஆணைய தலைவர் வசிரெட்டி பத்மா உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement