Load Image
dinamalar telegram
Advertisement

அண்ணாமலை அறிவிப்பு

தருமபுரம் ஆதீன மடத்தில் வரும் 22ம்தேதி பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை பாஜகவே நடத்தும்; ஆதீனத்தை எனது தோளில் நானே சுமந்து செல்வேன் என அதிரடியாக அறிவித்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பிரவேசம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஒரு பதிவில், எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார் என குறிப்பிட்டுள்ளார். 'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!' என்ற ஏழாம் திருமுறை பாடலை பதிவிட்டுள்ள அண்ணாமலை, தமிழ் பண்பாட்டை சுமப்போம்; மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் எனவும் கூறியுள்ளார்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement