Load Image
dinamalar telegram
Advertisement

78 வயது கோவிந்தம்மாளின் போராட்டம்! | Govindammal | Mayiladuthurai | Story

அவர் நினைவுகள் நிறைந்த வீட்டில் வாழ்வதே என் கடைசி ஆசை மதியம் 12 மணி இருக்கும். உச்சி வெயில் அடித்தது. திங்கள் என்பதால் மயிலாடுதுறை கலெக்டர் ஆபிசில் குறைத்தீர்ப்பு முகாம் நடந்தது. மனு கொடுக்க பெரிய கியூவில் பலர் காத்திருந்தனர். இந்த நேரத்தில் ஒரு மூதாட்டி, வாக்கிங் ஸ்டிக் பிடித்து , மனுவுடன் வந்தார். ஆபிஸ் வாசல் ஓரமாக தள்ளாடி நின்றார். இப்படி அவர் கலெக்டர் ஆபிசுக்கு மனுவுடன் வருவது முதல் முறை இல்லை. ஒவ்வொரு திங்களும் ஆஜர் ஆகி விடுவார். மனுவை சீக்கிரம் தரவும். அதற்கு நடவடிக்கை எடுக்கவும் , யாரிடமும் எந்த சிபாரிசும் கேட்காமல் கிளம்புவார். யார் இந்த மூதாட்டி ? அவர் வாரம் வாரம் என்ன மனு தான் கொடுக்கிறார்? அவர் பெயர் கோவிந்தம்மாள். வயசு 78. சொந்த ஊர் குத்தாலம் தாலுகாவில் உள்ள வில்லியனூர் கிராமம். கணவர், மகனை இழந்தவர். மகளை கும்பகோணத்தில் கட்டி கொடுத்தார். கோவிந்தமாளுக்கு சொந்தமாக இருந்தது ஒரு குடிசை வீடு தான். தட்டி கேட்க ஆள் இல்லாததால் அந்த இடத்தையும் , அக்கம்பக்கத்தினர் ஏமாற்றி பிடுங்கினர். உறவினர்கள், மகள் எவரும் உதவிக்கு வரவில்லை.ஒரு பாழடைந்த பஸ் ஸ்டாண்டில் தஞ்சம் அடைந்தார். உடம்பில் தெம்பு இல்லை என்றாலும் , அவரின் மனதில் தெம்பு இருந்தது. கணவர் நினைவோடு குடிசை வீட்டிலேயே கடைசி காலத்தை கழிக்க ஆசைப்பட்டார். அதற்காக போராட முடிவெடுத்தார் . வீட்டை மீட்டு தருமாறு மனு எழுதி, 6 மாதமாக போலீஸ் ஸ்டேஷன் , கலெக்டர் ஆபிஸ் என அலைந்து வருகிறார். ஆனால் எங்கும் உதவி கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் பேசி உதவி செய்கிறோம் என பரிதாபப்பட்டு யாராவது வந்தால், அதெல்லாம் வேண்டாம், தனியாக பார்த்துக்கொள்கிறேன் என நடையை கட்றாங்க கோவிந்தம்மாள். கண்ணீருடன் தன் ஆவேசத்தை வெளிப்படுத்தினார். #Govindammal #DinamalarStory #DinamalarNews Mayiladuthurai
Telegram Banner

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Vijaykumar
Vijaykumar - Madurai,சுவீடன் . 11-மே-2022 12:59 IST

பரமேஸ்வரா நியாமான ஆசை தான்

Reply
a natanasabapathy
a natanasabapathy - vadalur,இந்தியா . 10-மே-2022 17:18 IST

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் திராவிட குஞ்சுகளின் பார்வையில் இந்த செய்தி படவில்லையோ .அரசியல்வாதிகளுக்கு salute அடிக்கும் ias கண்களிலும் காதுகளிலும் எட்டவில்லையோ

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement