Load Image
Advertisement

காஞ்சிபுரத்தில் இறந்த மகனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பெற்றோர்!

காஞ்சிபுரம் மாநகராட்சி, வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ஓய்வு பெற்ற ஆசிரியர். மனைவி சிவகாமி ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர். 48 வயது மகன் ஹரிஹரன், மனைவி வரலட்சுமியுடன் பெற்றோருடனே வசித்து வந்தார். ஹரிஹரன், கடந்த 2001ம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சி தேர்தலில், 44வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி மாரடைப்பால் இறந்தார். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாத பெற்றோர், மகன் ஹரிஹரனுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் உதவியுடன் 2.50 லட்சம் செலவில், ஹரிஹரனின் நிஜ உயரமான 5.3 அடி உயரத்தில் தத்துரூபமாக கற்சிலையை வடிவமைத்தனர். வீட்டிற்கு  பக்கத்திலேயே கோயில் அமைத்து சிலையை நிறுவி, ஹரிஹரனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் திறந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement