Load Image
dinamalar telegram
Advertisement

மோடி மீது சோனியா தாக்கு| இந்தியாவை பதட்டத்தில் வைப்பது தான் பாஜக அரசின் வேலை!

ராஜஸ்தான் உதய்ப்பூரில், காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு தொடங்கியது. கட்சியை வலுப்படுத்த இம்மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா, மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். அதிகபட்ச இடங்களை ஆள வேண்டும். ஆனால் மக்களுக்கு குறைந்தபட்ச அரசை வழங்கினால் போதும் என்பது மோடி மற்றும் அவரது கட்சியின் தாரக மந்திரம். எப்போதும் நாட்டை பதட்டமான நிலையில் வைத்திருக்க வேண்டும்; மக்கள் பயத்தோடும் பாதுகாப்பின்மையுடன் இருக்க வேண்டும்; குறிப்பாக மைனாரிட்டி மக்களை கொடூரமாக தாக்குவதும், அவர்களை பலிகடா ஆக்குவதும் தான் மோடி அரசின் வேலை என்று சோனியா குற்றம் சாட்டினார். பார்த்துப்பார்த்து வளர்த்த நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க வேண்டும்; எதிர்க்கட்சிகளை பந்தாடி பழிவாங்க வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அவதூறு பரப்ப வேண்டும்; புலனாய்வு அமைப்புகளை ஏவி சிறை தள்ள வேண்டும்; இவை தான் மோடி அரசின் முழுநேர வேலை என சாடினார். பேச்சாற்றல் மிகுந்த மோடி, வாய் திறந்து பேச வேண்டிய நேரங்களில் எல்லாம் மவுனம் சாதித்து வருகிறார் என்றும் சோனியா குற்றம்சாட்டினார். #Sonia #Congress #modi
Telegram Banner

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 14-மே-2022 15:40 IST

காங்கிரஸ்க்கு இந்தியாவை சுரண்டி சுருட்டியது மட்டுமே வேலையாக இருந்தது. இப்ப முடியல்லியே 😜😀😜

Reply
SUBBU,MADURAI
SUBBU,MADURAI - . 14-மே-2022 04:24 IST

…..

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement