Load Image
dinamalar telegram
Advertisement

27 பேர் உயிர் குடித்த டெல்லி தீ | மாயமான 29 பேர் கதி என்ன? | 27 Dead In Delhi Fire | Dinamalar

மேற்கு டெல்லியின் முண்ட்கா Mundka மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அருகே 4 மாடி கட்டடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 27 பேர் உடல் கருகி பலியாகினர். தீக்காயங்களுடன் 50 பேர் மீட்கப்பட்ட சிகிச்சையில் உள்ளனர். தீவிபத்தின்போது, அந்த கட்டடத்தில் இருந்த, 29 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. மாயமானவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. விபத்து நடந்த கட்டடத்தில் பல கம்பெனிகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அங்கிருந்த சிசிடிவி தயாரிக்கும் நிறுவனத்தில்தான் முதலில் தீப்பற்றியது. அந்நிறுவனத்தில் உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் Harish Goel, வருண் கோயலை Varun Goel போலீஸ் கைது செய்தது. பலியானோரில் இவர்களின் தந்தை அமர்நாத் கோயலும் ஒருவர். கட்டடத்தின் உரிமையாளர் மணீஸ் லக்ரா Manish Lakra. தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸ் தேடுகிறது. விபத்து நடந்தபோது 2வது மாடியில் மோட்டிவேஷனல் (Motivational) வகுப்பு நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். பலியானோரில் பலர் இந்த வகுப்பில் பங்கேற்றவர்கள் என போலீஸ் வட்டாரம் கூறியது. தீக்கிரையான கட்டடத்தின் சிறிய பகுதி இடிபாடுகளை மட்டுமே இன்னும் தேட வேண்டி உள்ளது. இதில் மாயமானவர்கள் பற்றி ஏதேனும் தெரியவருமா? என்பதை பார்க்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் கூறினர். இத்துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் தலைமையில் குழு அமைத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். #Delhi #FIR #Delhi Police #Mundkafire #DelhiChiefMinisterArvindKejriwal #DeputyCMManishSisodia #NewDelhi #SanjayGandhiMemorialHospital
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement