Load Image
dinamalar telegram
Advertisement

ஜாதி சான்று இல்லாததால் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லகுட்டபட்டியை சேர்ந்த தமிழ்விழி பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஜாதிச்சான்றிதழ் இல்லாததால், மாணவியை பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகம் வந்த மாணவியின் குடும்பத்தினர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 10 ஆண்டுகளாக ஜாதிச்சான்றிதழ் கேட்டு போராடி வருவதாக மாணவி குடும்பத்தினர் தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். #Krishnagiri #School #Exam #dinamalar
Telegram Banner

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
Ramaraj P
Ramaraj P - . 17-மே-2022 08:01 IST

இந்த பெற்றோர்களை தூக்கிலிட வேண்டும். ஜாதிச் சான்றிதழ் வாங்க அதிகபட்சம் 30 நாட்கள் ஆகும். ஏன் இவ்வளவு நாள் வாங்காமல் இருந்தார்கள்.

Reply
சர்வம் சிவமயம் பாலமுருகன் மேட்டுப்பாளையம்

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பள்ளியில் பாடம் எடுக்கிறார்கள் ஆனால் இவர்கள் அதற்கு நேர்மாறாக அனைத்து ஜாதி கேட்கிறார்கள் ஒன்று பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது இவர்கள் மாற வேண்டும்

Reply
S. Narayanan
S. Narayanan - Chennai,இந்தியா . 16-மே-2022 19:28 IST

இதை கண்டு பிடிக்க பத்து வருட போராட்டம் அரசு அதிகாரிகளுக்கு. நல்லா வேலை செய்யிராங்க.

Reply
sivakumar
sivakumar - chennai,இந்தியா . 16-மே-2022 19:22 IST

என்னய்யா ஒலகம் இது🧐

Reply
ராஜா
ராஜா - . 16-மே-2022 18:45 IST

போச்சம்பள்ளி என்னும் ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் சமூகநீதி திராவிட மாடல் அரசு.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement