Load Image
dinamalar telegram
Advertisement

2 பேருக்கும் ஹெல்மெட் கட்டாயம் இறுக்கிப் பிடிக்கும் காவல்துறை

சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் தான் அதிக விபத்து ஏற்படுவதாக இதில் தெரியவந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சென்னையில் 98 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் 80 பேர் ஓட்டுனர்கள், 18 பேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள். ஹெல்மெட் அணியாமல் சென்ற 714 பேரும் பின்இருக்கையில் அமர்ந்து சென்ற 124 பேரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். விபத்துகளால் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் உள்ள சிக்னல்களில் ஹெல்மெட் அணியாதவர்களை கண்காணிக்க சிறப்பு தணிக்கை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சென்னையில் பின்இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 367 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலா 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement