Load Image
dinamalar telegram
Advertisement

தேர்வு எழுத சென்ற மாணவி கடத்தல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 16 வயது சிறுமி, கடந்த 12ம் தேதி பிளஸ்1 ஆங்கில தேர்வு எழுத சென்றார். தேர்வு முடிந்ததும் சிறுமி வெளியே வரவில்லை. காப்பக பாதுகாவலர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சிறுமி தேர்வு எழுதவில்லை என தெரிவித்தனர். அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையில், துரைமுருகன் என்பவர் சிறுமியை காதலித்தது தெரிய வந்தது. அவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமியை தேடி வந்தனர். நேற்று செங்குன்றம் பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்றிருந்த சிறுமியை மீட்டனர். திருமண ஆசை காட்டி அழைத்து சென்ற துரைமுருகன் தாலி கட்டி,  திருச்சி கீரனூர் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்க வைத்து  கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். டார்ச்சர் தாங்க முடியாமல் காப்பகத்தில் விடும்படி சண்டை போட்டதால் அழைத்து வந்து விட்டு சென்றதாக சிறுமி வாக்குமூலம் அளித்தார். செங்குன்றம் அடுத்த காவாங்கரையில் சுற்றித்திரிந்த துரைமுருகனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement