Load Image
dinamalar telegram
Advertisement

அதிக வருவாய் ஈட்டிய கட்சி திமுகவுக்கு முதலிடம்!

இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளின் வருவாய், செலவினங்கள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் வருவாய் மற்றும் செலவினம் குறித்த கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கையை இந்த அமைப்பு தயாரித்தது. 2020_2021ம் நிதியாண்டில் 31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடி. இதில் திமுக ரூ.149.95 கோடி வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. ரூ.108 கோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டாமிடத்திலும், ரூ.73.34 கோடியுடன் பிஜு ஜனதா தளம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதிகம் செலவு செய்த கட்சிகளின் பட்டியலிலும் திமுகவே முதலிடம் பிடித்துள்ளது. திமுக 218 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.7 கோடியும், அதிமுக ரூ.42 கோடியும் செலவு செய்துள்ளன. நாட்டில் மொத்தமுள்ள 54 மாநில கட்சிகளில் 23 கட்சிகளின் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
Telegram Banner

Comments Comments (6)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)
Yogeshananda
Yogeshananda - Erode,இந்தியா . 29-மே-2022 12:28 IST

ஒரு வருடத்திலேயே கல்லா கட்டீட்டானுக இந்த கலவானிக் கும்பல்

Reply
தமிழன்
தமிழன் - Madurai,இந்தியா . 29-மே-2022 08:37 IST

ஆட்ச்சியை பிடிக்க விடியல் எதயும் செய்ய தயங்கியதில்லை. ஆம்.. எதையும்.

Reply
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 29-மே-2022 07:15 IST

வருவாயா? கொள்ளையா?

Reply
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 29-மே-2022 07:08 IST

அதிக வருவாய் சுருட்டிய கட்சி என்பதிலும் திமுக தான் முதலிடம்.

Reply
Parthasarathy Badrinarayanan
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா . 29-மே-2022 05:28 IST

திமுக அடிக்கும் கொள்ளைக்கு இதுவே சாட்சி

Reply
sunny raja
sunny raja - . 29-மே-2022 02:08 IST

இதன் தலைவர்கள் இதை விட நூறு மடங்கு சேர்த்து விட்டனரே!

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement