Load Image
dinamalar telegram
Advertisement

தூக்கத்தில் லாரி ஓட்டிய டிரைவரால் 7 பேர் பலி

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம்  வட்டரபாவி கிராமத்தை  சேர்ந்த 38 பேர் டாடா ஏஸ் சரக்கு வேனில்  ஸ்ரீசைலம்  கோயிலுக்குச் சென்றனர். தரிசனம் முடிந்துவிட்டு ஊர் திரும்பினர். நள்ளிரவு ரந்தசிந்தலா துணை மின் நிலையம் அருகே வந்தபோது  அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமென்ட் லோடு லாரி மீது  டாடா ஏஸ் மோதி தலைகீழாக உருண்டது.  விபத்து நடந்த இடத்திலேயே 4 பேர் இறந்தனர். காயமடைந்தவர்களுக்கு குரஜாலா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளிக்கபடுகிறது. மருத்துவனையில் 3 பேர் இறந்தனர். டாடா ஏஸ்  டிரைவர் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டியதால்  விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement