Load Image
dinamalar telegram
Advertisement

சென்னை டூ சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு 104 பேர் உயிர் தப்பினர்

சென்னை விமானநிலையத்திலிருந்து நேற்றிரவு சிங்கபூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. 98 பயணிகள் 6 சிப்பந்திகள் என 104 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. பயணிகள் ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இன்று அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்ஜினியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காலை 10மணியாகியும் விமானம் புறப்படவில்லை. இதன் காரணமாக பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பகல் 12 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இயந்திர கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 104 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement