Load Image
dinamalar telegram
Advertisement

ஏட்டு மனைவியிடம் செயின் பறிப்பு பைக்கில் இருந்து விழுந்த பரிதாபம்

வேலூர், பள்ளிகொண்டா காவல் வட்டத்தில் போலீஸ் சிறப்புபிரிவில் தலைமை காவலராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. மனைவி, மகளுடன், வேலூரில் இருந்து பள்ளிகொண்டாவுக்கு டூவீலரில் இரவில் சென்று கொண்டிருந்தார். பொய்கை அருகே வந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், தட்சிணாமூர்த்தி மனைவி அமுதா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு தப்பினர். இதனால் டூ வீலரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து மூவரும் காயமடைந்தனர். அமுதாவுக்கு கால் எலும்பு முறிந்தது. மகளுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழிப்பறி செய்தவர்களை தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement