Load Image
dinamalar telegram
Advertisement

சென்னையில் மழை 31 விமான சேவை பாதிப்பு

சென்னையில் நேற்று இரவு பெய்த மழை, சூறாவளி காற்றால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஜெர்மனி, தோகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அவை பெங்களூரு, ஐதராபாத்துக்கு அனுப்பப்பட்டன. மலேசியா, தாய்லாந்து, டில்லி, வாரணாசி உள்ளிட்ட 12 இடங்களில் இருந்து வந்த விமானங்கள் வானில் ஒரு மணி நேரம் வட்டமடித்து பின்னர் தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மழை, சூறாவளியால் மொத்தம் 31 விமான சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement