Load Image
dinamalar telegram
Advertisement

மாநில ஜூனியர் நீச்சல் போட்டி சிறுவர்கள் சாதனை

ஒடிசாவில் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, 48வது தேசிய நீச்சல் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு போட்டியான, 48வது மாநில ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், வேளச்சேரியில் நடந்தது. சிறுமியருக்கான 'குரூப் - 2' பிரிவில் 100 மீ., 'பேக்ஸ்ட்ரோக்' நீச்சலில், எஸ்.டி.ஏ.டி., - ஏ.எஸ்.பி., அணியை சேர்ந்த பிரமிதி ஞானசேகரன், போட்டி துாரத்தை 1 நிமிடம் 11.23 வினாடிகளில் கடந்து,சாதனை படைத்தார். குரூப் - 1 சிறுவர்களுக்கான 100 மீ., பேக்ஸ்ட்ரோக் நீச்சலில், டர்ட்ல்ஸ் அணியின் எச்.நிதிக், 1 நிமிடம் 00.80 வினாடிகளில் கடந்தார். குரூப் - 1 சிறுவர்களுக்கான 100 மீ., 'பிரஸ்ட்ரோக்' நீச்சலில் எஸ்.ஏ.வி.டைடன்ஸ் அணியை சேர்ந்த ஜாஷ்வா தாமஸ் போட்டி துாரத்தை 1 நிமிடம் 05.91 வினாடிகளில் கடந்து சென்றார். சிறுவர்களுக்கான 1,500 மீ., 'ப்ரீஸ்டைல்' நீச்சலில் ஆர்கா அணி வீரர் சர்வபள்ளி கிருஷ்ண பிரணவ் 16 நிமிடம் 52.20 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஒடிசாவில் நடக்கும் தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement