Load Image
Advertisement

மாநகராட்சி தோண்டிய குழியில் மூழ்கிய முதியவர்

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. டவுன், ஜங்ஷன், பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் ரோட்டில் வெள்ளம் ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. டவுன் வ.உ.சி தெருவில் குடைபிடித்தப்படி சைக்கிளை உருட்டிக் கொண்டு ஒரு முதியவர் சென்றார். திடீரென ரோட்டில் புதைந்தார். கழுத்துவரை நீரில் மூழ்கி தத்தளித்தார். அந்த வழியாக போனவர் வேகமாக முதியவரை மீட்டார். நடுரோட்டில் தோண்டிய குழியை மாநகராட்சி மூடவில்லை. தண்ணீர் தேங்கி நின்றதால் பள்ளம் தெரியாமல் முதியவர் தடுமாறி விழுந்துள்ளார். இந்த வீடியோ காட்சி பரவியது. "இது தான் ஸ்மார்ட் சிட்டியா...?" என நெல்லைவாசிகள் வறுத்தெடுக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement