Load Image
dinamalar telegram
Advertisement

5லட்சம் லிட்டர் பால் திருடிய ஆவின் அண்ணாமலை காட்டம்

ஆவினில் மக்கள் கொடுக்கும் பணத்திற்கு குறைவாக பால் வழங்க காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். அரசு நிறுவனமே மக்களுக்கு வழங்கும் அரை லிட்டர் பாலில் 70 மி.லி., அளவை குறைத்து வழங்கிய அதிர்ச்சி தகவல் ஆதாரத்துடன் வெளியாகி இருக்கிறது. வெறும் 70 மி.லி., தானே குறைந்தது என்றும், தெரியாமல் நடந்து விட்டது என்றும் யாரும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட் தினமும் விற்பனையாகிறது. ஒரு பாக்கெட்டில் 70 மி.லி. என்றால், 3.08 ரூபாய் குறைய வேண்டும். தினமும் 2.16 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணம் கொள்ளை போயிருக்கிறது. இயந்திர கோளாறால் ஏற்பட்ட தவறு என்று ஒரு பேச்சுக்காக வைத்து கொண்டால், தவறு நடந்த முதல் நாளே 5 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே. இந்த அதிக பால் எங்கே போனது? இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தி.மு.க., ஆட்சியில் தினமும் புதுப்புது ஊழல்கள் முளைக்கின்றன என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
அப்புசாமி
அப்புசாமி - . 02-ஆக்-2022 10:21 IST

ஆட்டையப் போடறதுக்குன்னே பொறந்தவங்க.... கண்டு பிடிச்சு சொன்னா பால் பேக்கிங் மிஷினே குடிச்சிடிச்சுன்னு கதை உடுவாங்க... பால் வளத்துறை அமைச்சர்லேருந்து அடிமட்ட ஊழியர் அனவரையும் டிஸ்மிஸ் பண்ணனும். இல்லேன்னா நாசர் டி.ஆர் பாலு காலில் விழுவானா?

Reply
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 02-ஆக்-2022 10:05 IST

நடப்பது விடியல் அரசு. திருட்டு, புரட்டு, சுருட்டு, உருட்டு என்று அரசு சம்பந்தமான எல்லா இடங்களிலும் அதிக வலிமையுடன் இருக்கும். கீழ்மட்டம், மேல்மட்டம் என்று எல்லா மட்டத்திலும் திருடர்கள், கொள்ளைகாரர்கள் அனைவரும் விஷேச சக்தி பெற்று வீரியத்துடன் செயல்படுவர். திமுகவிற்கு ஓட்டு போட்ட பாவத்திற்கு தமிழக மக்கள் அனுபவிப்பதை விடியல் என்றும் திராவிட மாடல் என்றும் சொல்கிறார்கள்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement