Load Image
dinamalar telegram
Advertisement

ஆண்டு தோறும் 6% கட்டண உயர்வு மின்வாரியம் கார்ப்பரேட் கம்பெனியா

தமிழக மின் வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 52 சதவீதம் வரை மின்கட்டண உயர்வை அறிவித்ததோடு நிற்காமல், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். இப்போது அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து மக்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும். ஆண்டு தோறும் இப்படி சுமை ஏற்றப்பட்டால் ஏழை, நடுத்தர மக்களால் வாழவே முடியாத நிலை வந்துவிடும். 90 சதவீத மக்கள் வருமானம் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வதில்லை. மின்சார உற்பத்தி செலவும் 6 சதவீதம் உயர்வதில்லை. அவ்வாறு இருக்கும் போது கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயல். மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என்றும் ராமதாஸ் கூறினார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
அப்புசாமி
அப்புசாமி - . 03-ஆக்-2022 06:39 IST

ஆண்டு தோறும் மின்வாரிய ஊழியர்களுக்கு சம்ம்பள உயர்வு, பஞ்சப்படி, அகவிலைப்படி எல்லாம் குடுக்க துட்டு எங்கேருந்து வரும்? இவிங்களுக்கு பொது அறிவும் பாத்தாது. பொருளாதார அறிவும் கிடையாது.

Reply
S.Baliah Seer
S.Baliah Seer - Chennai,இந்தியா . 02-ஆக்-2022 15:57 IST

முதலில் இந்த வாரியங்களை கொண்டுவந்தது தப்பு.அதனால்தான் அவை தள்ளாடுகின்றன.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement