Load Image
dinamalar telegram
Advertisement

கட்டட அனுமதி பெற ஓராண்டு காத்திருக்கும் அவலம்

டிஸ்கிரிப்ஷனில் இதை சேர்க்கலாம்: அரசியல் தலையீடு காரணம் என்கின்றனர், DTCP அதிகாரிகள் தமிழகத்தில் பொது கட்டட விதிகள் 2019ல் அமலுக்கு வந்தன. இதன் அடிப்படையில், 10 ஆயிரம் சதுர அடி வரையிலான வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. அதன்படி கட்டுமான திட்டங்களுக்கு, 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் கடைப்பிடிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து, DTCP எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி இணையதள வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னும், பெரும்பாலான இடங்களில் நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதனால், மேலதிகாரிகளால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு அதிகரிப்பாலும், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறுவது பாதிக்கப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகள் சொல்லும் கோப்புகளுக்கு மட்டுமே ஒப்புதல் கிடைக்கும் சூழலும் நிலவுகிறது. இதனால் கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகள் ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை தாமதம் செய்கின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம் என டிடிசிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
V GOPALAN
V GOPALAN - chennai,இந்தியா . 08-ஆக்-2022 14:25 IST

Stalin says Best state in South Asia He is referring for total mismagement TN is No1 in South Asia

Reply
Sathyanarayanan Sathyasekaren
Sathyanarayanan Sathyasekaren - . 08-ஆக்-2022 13:54 IST

0..........

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement