Load Image
dinamalar telegram
Advertisement

கற்களால் பூட்டை உடைத்து பாரத மாதாவுக்கு மரியாதை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தருமபுரி, பாப்பாரபட்டியில், பாஜகவினர் பேரணி நடத்தினர். முன்னாள் எம்பி கேபி.ராமலிங்கம் தலைமையில், பஸ் ஸ்டாண்ட் அருகே பேரணி துவங்கி, சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் முடிந்தது. அங்குள்ள பாரதமாதா சிலைக்கு பாஜவினர் மாலை அணிவிக்க முற்பட்டனர். பாரதமாதா நினைவாலய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அதனை திறக்க கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார். பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கர், கேபி ராமலிங்கம் ஆகியோர் கற்களால் பூட்டை உடைத்து திறந்தனர். பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ராஜா
ராஜா - . 12-ஆக்-2022 09:00 IST

அந்த இடத்தை பார்வையிட நேரக்கட்டுப்பாடு இருக்கிறதா தெரியவில்லை. இல்லை என்றால் கண்காணிப்பாளர் செய்தது குற்றம். மக்கள் வரிப்பணத்தில் அவர்களின் நன்மைக்காக கட்டப்பட்ட இடத்திற்கு அரசியல் கால்புணர்வுக்காக தடை போடுவது அசிங்கமும் கூட.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement