Load Image
dinamalar telegram
Advertisement

ஏர்போர்ட்டில் ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்

எத்தியோபியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை ஏர்போர்ட் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்தியாவை சேர்ந்த 38 வயதான இக்பால் பாஷா என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, காலணிகள், உள்ளாடைகள், கோட்டின் ரகசிய பாக்கெட்களில் போதை பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கொகைன் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 100 கோடி ரூபாய். ஒரே நபரிடம் இருந்து இந்தளவுக்கு போதைப்பொருள் பிடிபடுவது இது முதல்முறை என்கிறார்கள் அதிகாரிகள். இக்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
வீரா
வீரா - . 13-ஆக்-2022 15:53 IST

இவங்களை கைது செய்யாமல் சிங்கப்பூர் விமானத்தில் ஏற்றி விட்டு சிங்கப்பூருக்கு தகவல் கொடுத்து விடவேண்டும்.

Reply
John Miller
John Miller - Hamilton,பெர்முடா . 13-ஆக்-2022 14:16 IST

இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து விட போகின்றார்.

Reply
Yogeshananda
Yogeshananda - Erode,இந்தியா . 13-ஆக்-2022 14:06 IST

திராவிட மாடல் திருடன்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement