Load Image
dinamalar telegram
Advertisement

தினமலர் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

75 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசியக் கொடியை இன்று முதல் ஆகஸ்ட் 15 ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி மதுரை, சென்னை தினமலர் அலுவலகத்தில் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மதுரையில் தினமலர் மூத்த ஏஜென்ட் தெற்குவாசல் சலீம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் அலுவலகத்தில் மூத்த ஏஜென்ட் கண்ணுசாமி, தேனி அலுவலகத்தில் மூத்த ஏஜென்ட் வடபுதுப்பட்டி சந்திரன், ராமநாதபுரம் அலுவலகத்தில் மூத்த ஏஜென்ட் மண்டபம் சீனிவாசன், சிவகங்கை அலுவலகத்தில் மூத்த ஏஜென்ட் காளையார்கோவில் சுப்பிரமணி, விருதுநகர் அலுவலகத்தில் மூத்த ஏஜென்ட் அப்பையநாயக்கன்பட்டி நல்லையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தேசிய கீதம் பாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Renukadevi-Srirangam
Renukadevi-Srirangam - . 13-ஆக்-2022 15:31 IST

வந்தேமாதரம் பாரத்மாதாகி ஜே ஜெய்ஹிந்த்.

Reply
R Shankaranarayanan
R Shankaranarayanan - Chennai,இந்தியா . 13-ஆக்-2022 13:54 IST

Jai Hind

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement